பிரபல நடிகை தற்கொலை? சமூக வலைதளங்களில் பரவும் தீயாக பரவும் தகவல்!

 
தேவிப்பிரியா

 

தான் தற்கொலை செய்து இறந்துவிட்டதாகப் பொய்யான வதந்திகளைப் பரப்பிச் சிலர் பணம் சம்பாதித்து வருவதாக நடிகை தேவி பிரியா மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இத்தகைய பொறுப்பற்ற போலிச் செய்திகளால் தனது மதிப்பு கெடுவதாக வருத்தம் வெளியிட்டார்.

சினிமா மற்றும் சின்னத்திரையில் ஏற்கெனவே எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்து வரும் தனக்கு, இதுபோன்ற தேவையற்ற வதந்திகள் பொதுமக்கள் மத்தியில் மேலும் தவறான எண்ணங்களையும் பார்வையையும் ஏற்படுத்தும் என்றும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார். வியூஸ்களுக்காகவும் வருமானத்திற்காகவும் நடிகர், நடிகைகளின் உயிருடன் விளையாடும் இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வெளியாகிச் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது