ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை இலியானா... குவியும் வாழ்த்துக்கள்!

 
இலியானா

சமீபத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்த நடிகை இலியானா, தான் கர்ப்பமாக இருப்பதையும் புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்திருந்தார். இந்நிலையில், தனக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழில் விஜய்யின் நண்பன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை இலியானா, தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான தி பிக் புல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த இலியானா, அதன் பின்னர் படங்கள் எதையும் கமிட் செய்யாமல் இருந்து வந்தார்.

லண்டனைச் சேர்ந்த மாடல் நடிகர் ஒருவருடன் அவர் தற்பொழுது வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது காதலருடைய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் அந்த காதலன் யார் என்பதை வெளிப்படையாக அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகை இலியானா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் "எங்கள் அன்பான மகனை, இந்த உலகிற்கு வரவேற்பதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம் என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.  மேலும் தங்களது மகனின் பெயர் Koa Phoenix Dolan என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web