நடிகை ஜோதிர்மயி தாயார் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!

 
ஜோதிர்மயி

 தமிழ் திரையுலகில் சுந்தர்.சி யின் ‘நகரம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகை  ஜோதிர்மயி. இவரது தாயார் பி.சி.சரஸ்வதி. இவர் கடந்த சில நாட்களாக  உடல் நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், பி.சி.சரஸ்வதி சிகிச்சை பலனின்றி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இவருக்கு வயது 75.

ஜோதிர்மயி


சரஸ்வதியின் உடல்  தற்போது பொது மக்கள் அஞ்சலிக்காக எர்ணாகுளத்தில் உள்ள திருநக்கரா பகுதியில் வைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று   மாலை  அவரது உடல் ரவிபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.  

ஜோதிர்மயி
ஜோதிர்மயிக்கு  2004ம் ஆண்டு நிஷாந்த் குமாரை திருமணம் செய்து கொண்டார். 6 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து விட்டனர்.  2010-ம் ஆண்டு தன்னுடைய முதல் கணவர் நிஷாந்த் குமாரை  பிரிந்த நிலையில் 2015ல்  மலையாள இயக்குனர் அமல் நீரத்தை  2வதாக திருமணம் செய்துகொண்டார் . இதனையடுத்து  ஜோதிர்மயி, தற்போது மலையாள படங்களில் மட்டும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.  
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web