சமூக வலைதளங்களால் உறவுகளில் விரிசல் - நடிகை காஜல் அகர்வால் எச்சரிக்கை!

 
காஜல் அகர்வால்

சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன்களின் அதிகப்படியான பயன்பாடு தம்பதிகளுக்கு இடையே பொறுமையின்மையையும், உறவுகளில் ஆழமான விரிசலையும் ஏற்படுத்துவதாக நடிகை காஜல் அகர்வால் கவலை தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வால்

தம்பதிகள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நேரத்தில்கூட செல்போனிலேயே மூழ்கியிருப்பது, அவர்களுக்கிடையேயான இயல்பான உரையாடலைக் குறைத்து மனப்பூர்வமான நெருக்கத்தைப் பாதிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காஜல் அகர்வால்

டிஜிட்டல் சாதனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்குவதும், பொறுமையுடன் பேசித் தீர்ப்பதும் குறைந்துபோய் இறுதியில் அது உறவில் பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது என அவர் எச்சரித்துள்ளார்.