ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!
நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து அவரை ஹைதராபாத்தில் கைது செய்துஅனர். அவருக்கு நவம்பர் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்க கோரி நடிகை கஸ்தூரி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
