நடிகை குஷ்பூ பாஜக மாநில துணைத் தலைவராக நியமனம்!
தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவர் என ஏற்கனவே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. இதன்படி தற்போது பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ஒப்புதலுடன் இந்த புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டதாக தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

இந்த நியமனங்களின்படி குஷ்பு, சசிகலா புஷ்பா உட்பட 14 பேர் மாநில துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வினோஜ் பி செல்வம், கராத்தே தியாகராஜன் ஆகிய 15 பேர் மாநில செயலாளர்களாகவும், பொருளாளராக S.R.சேகர் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், கருப்பு முருகானந்தம் ஆகியோர் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பாஜக மாநில துணைத் தலைவர்களாக சக்கரவர்த்தி, V.P.துரைசாமி, K.P.ராமலிங்கம், கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், AD சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், மா.வெங்கடேசன், K.கோபால்சாமி, N.சுந்தர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
