நடிகை குஷ்பு கைது... மதுரையில் பாஜக பேரணி!
இன்று தமிழக பாஜக மகளிரணியினர் மதுரையில் இருந்து சென்னை வரை நீதி கேட்பு பேரணி மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், மதுரையில் நடிகை குஷ்புவை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக பேரணியில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த நடிகை குஷ்பு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, “தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்குவது, கைது செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழகத்தில் 44,000 கோடி ரூபாய் கல்விக்காக செலவு செய்கிறோம் என இதற்காக அவர்கள் சாட்டை எடுத்து அடிப்பார்களா? அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது தான் முதல் பிரச்சினை கிடையாது. மணிப்பூரில் எல்லை மீறி பிரச்சனை நடக்கிறது.
மணிப்பூரில் நடந்த பிரச்சனையை தெரியாமல் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக, காங்கிரசார் இருக்கிறார்கள்...அவர்கள் அரசியலில் இருக்கக் கூடாது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மாநில மகளிர் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்று கைது செய்தால் பார்த்துக் கொள்வோம். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத திமுக பெண்கள் பாதுகாப்பு மையம் திறக்கிறது. முதலில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பெண்களுக்கு ஆண்களால் கொடுமை நடந்தால், அது எந்த மாநிலத்தில் நடந்தாலும் குரல் கொடுப்போம்.. இந்த சாதி, இந்த மதம் என எதையும் சம்பந்தப்படுத்தி பார்க்கக்கூடாது. பெண்ணுக்கு எதிரான செயலாக தான் பார்க்க வேண்டும், அங்குதான் அரசியல் பண்ணக்கூடாது. விஜய் மட்டுமல்ல எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். விஜயும் பாஜகவும் இணைய வாய்ப்புள்ளதா? என்பதற்கு டெல்லியில் இருப்பவர்கள் தான் பதில் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.