அரிட்டாபட்டிக்கு செல்வதில் முதல்வருக்கு சின்ன சந்தோஷம் , செய்துவிட்டு போகட்டும்... நடிகை குஷ்பூ !

 
குஷ்பூ

 இன்று ஜனவரி 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில்  பாரதிய ஜனதா கட்சி அலுவலகமான கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளான  சரத்குமார் மற்றும்  குஷ்பு இருவரும்  தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். இதில் மாநில  துணைத் தலைவர்கள் மாநில செயலாளர்கள் மூத்த பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குஷ்பூ

 இதையடுத்து  பேசிய நடிகை குஷ்பு, “நடிகை ஷோபனா, நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி, அந்த அங்கீகாரம் அவர்களுக்கு மிக முக்கியமானது. யாருக்கு விருது கொடுத்தால் நன்றாக இருக்கும் நியாயமாக இருக்கும் என்று எண்ணி சரியாக தேர்வு செய்து விருது கொடுக்கப்பட்டு இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. 

குஷ்பூ


அரசியல் ரீதியாக பார்க்காமல் யாருக்கு விருது கொடுத்தால் நியாயமாக இருக்கும் என்று அதில் கொண்டு சரியாக தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அரிட்டாபட்டிக்கு முதல்வர் செல்வது காப்பி கேட் போன்று உள்ளது. மத்திய அரசு செய்வதை அப்படியாக அச்சடித்தது போல் காப்பி அடிக்கிறார்கள். அரிட்டாபட்டிக்கு செல்வதில் முதல்வருக்கு சின்ன சந்தோஷம் கிடைக்கிறது செய்துவிட்டு போகட்டும்” என கூறியுள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web