கடும் காய்ச்சல் ... நடிகை மமிதா பைஜு மருத்துவமனையில் அனுமதி !

 
மமிதா

 

 

 

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை மமிதா பைஜு, திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குக் கடுத்த காய்ச்சல், உடல்வலி, மற்றும் ஒவ்வாமைப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் முழுமையான ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

யாரு கண்ணு பட்டுச்சோ!.. ஹாட்ரிக் 200 கோடி அடித்த மமிதா பைஜு மருத்துவமனையில் அனுமதி

இதன் காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள கிளைடு மலையாளி சங்கம் சார்பில் நடைபெறவிருந்த ஓணப் பிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருந்த தனது பயணத்தை அவர் தவிர்க்க நேர்ந்துள்ளது. பயணம் செய்ய முடியாத சூழல் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Mamitha Baiju: நடிகை மமிதா பைஜூவுக்கு என்ன ஆச்சு.? மருத்துவமனையில் திடீர் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Times Now Tamil

தனது உடல்நிலை காரணமாகப் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளமைக்கு அவர் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மமிதா பைஜு விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனத் திரையுலகத்தினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.