"மனிதநேயமே எப்போதும் வெல்ல வேண்டும்" - நீட் விவகாரத்தில் மனம் திறந்த நடிகை மஞ்சு வாரியர்!
நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து, பிரபல நடிகை மஞ்சு வாரியர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் கவனம் பெற்றுள்ளது. கல்வி அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மஞ்சு வாரியர் தனது பதிவில், கேள்விகள் கேட்கவும், தங்களது நியாயமான கவலைகளை வெளிப்படுத்தவும், சரியான உரையாடலை எதிர்பார்க்கவும் நாட்டின் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் முழு உரிமை உண்டு.

அரசியலை விட எப்போதும் மனிதநேயமே வெல்ல வேண்டும். இந்தியா முழுவதும் தேர்வுகள் மற்றும் கல்வி அமைப்பின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும்.
கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கை என்பது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நியாயமான நடைமுறைகள் மூலமாக மட்டுமே வலுப்பெறும். மாணவர்களின் எதிர்காலம் குறித்துத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ள அவர், "நமது நாட்டின் திறமைக்கே எப்போதும் முதலிடம் அளிக்கப்பட வேண்டும்; உண்மைகளுக்கே மதிப்பு இருக்க வேண்டும். நமது மாணவர்களுக்குப் பயம் நிறைந்த சூழல் தேவை இல்லை; மாறாக நம்பிக்கையும் நியாயமும் நிறைந்த ஒரு நல்ல எதிர்காலமே தேவை" என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.
