மூன்றாவது கணவரைப் பிரிந்ததாக நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு!

 
மீரா வாசுதேவன் மீரா வாசுதேவன்

'உன்னை சரணைடைந்தேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மீரா வாசுதேவன், தனது திருமண வாழ்க்கை குறித்துத் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசிய மீரா வாசுதேவன், கடந்த 17 ஆண்டுகளைத் திருமண உறவுகளுக்காகச் செலவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தனது வாழ்க்கையில் அடுத்தடுத்து அமைந்த மூன்று திருமண உறவுகளுமே கசப்பில் முடிவடைந்ததாக அவர் கூறியுள்ளார். தற்போது தனது மூன்றாவது கணவரையும் பிரிந்துவிட்டதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சினிமா மற்றும் தனது தனிப்பட்ட வளர்ச்சி குறித்து அவர் உருக்கமாகப் பின்வருவனவற்றைப் பகிர்ந்துள்ளார்.

மீரா வாசுதேவன்

சரியான திரையுலக வாய்ப்புகளைத் தான் பயன்படுத்தத் தவறிவிட்டதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். திருமணத்திற்காகச் செலவிட்ட இந்த 17 ஆண்டுகால நேரத்தைச் சினிமா, உடல்நலம் அல்லது தனது குடும்பத்திற்காகச் செலவிட்டிருக்கலாம் என அவர் ஆதங்கப்பட்டுள்ளார். திருமண உறவுகளுக்காகத் தனது பொன்னான காலத்தை வீணடித்துவிட்டதாக அவர் அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

மீரா வாசுதேவன்

மூன்று திருமணங்களும் தோல்வியில் முடிந்த நிலையில், அவர் பகிர்ந்துள்ள இந்தத் தனிப்பட்ட கருத்துகள் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.