எல்லை மீறிய நடிகரின் கன்னத்தில் அறைந்ததாக நடிகை நோரா அதிர்ச்சி பேட்டி!
பிரபல பாலிவுட் நடிகையும் நடனக் கலைஞருமான நோரா பதேஹி, தனது திரையுலக ஆரம்பக்கட்டத்தில் நடந்த கசப்பான சம்பவம் ஒன்றைக் கபில் சர்மா நிகழ்ச்சியில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
பாலிவுட்டில் நோரா பதேஹி அறிமுகமான ‘ரோர்: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் உடன் நடித்த சக நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும், இதனால் ஆத்திரமடைந்த தான் உடனடியாக அந்த நடிகரின் கன்னத்தில் அறைந்ததாகவும் நோரா தெரிவித்துள்ளார்.
நோரா அறைந்ததும் பதிலுக்கு அந்த நடிகரும் அவரைத் தாக்கியதால், படப்பிடிப்பு தளத்திலேயே இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் அளவுக்குப் நிலைமை கைமீறிச் சென்று கைகலப்பாக மாறியுள்ளது. இந்த மோதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த படத்தின் இயக்குநர், உடனடியாகத் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்திப் பிரித்து வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான 'தி கிரேட் இந்தியன் கபில் ஷோ' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தான் சந்தித்த இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை நோரா பதேஹி வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டது தற்போது வைரலாகி வருகிறது.
