“திரையுலகில் இருந்து திட்டமிட்டே ஒதுக்கப்பட்டேன்.. ” நடிகை பார்வதி உருக்கம்!

 
பூ நடிகை பார்வதி திருவோத்து

திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இன்னல்கள் குறித்துத் தன் கருத்துக்களைத் துணிச்சலாக வெளிப்படையாகப் பேசியதைத் தொடர்ந்து, தான் திரைப்படத் துறையில் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டதாக நடிகை பார்வதி திருவோத்து தெரிவித்துள்ளார். தமிழில் 'பூ', 'மரியான்' உள்ளிட்ட பல புகழ்பெற்ற படங்களில் நடித்துத் தன் யதார்த்தமான நடிப்பால் பரவலான கவனத்தைப் பெற்றவர் பார்வதி திருவோத்து.

சமூகத்திலும் திரைப்படத் துறையிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகக் குரல் கொடுத்ததன் காரணமாகவே தன்னைத் திரைத்துறையில் ஓரங்கட்ட முயன்றதாக அவர் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பார்வதி

தன்னைச் சினிமா துறையிலிருந்து ஒதுக்க நினைத்த போதெல்லாம், மலையாள ரசிகர்கள் தனது தனிப்பட்ட கருத்துக்களைத் தாண்டி நடிப்புத் திறமையை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு தொடர்ந்து அன்பளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ரசிகர்கள் தன் மீது காட்டிய அசைக்க முடியாத அன்பும் ஆழமான பிணைப்புமே தன்னை இன்றும் திரைத்துறையில் உறுதியுடன் இயங்கச் செய்து வருகிறது.