“வாழ்க்கையில் எனக்கு எந்தவித தேடலும் கிடையாது” - நடிகை பூஜா ஹெக்டே ஓபன் டாக்!

 
பூஜா ஹெக்டே

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தனது வாழ்க்கை முறை மற்றும் சிந்தனைகள் குறித்து சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

பார்லே- ஜி பிஸ்கட்டை டீ-யில் நனைத்து சாப்பிடுவது வீட்டில் இருப்பதை போல உணர வைக்கும்... வைரலாகும் பூஜா ஹெக்டே இன்ஸ்டா! 

வாழ்க்கையில் தனக்கென எந்தவிதத் தனிப்பட்ட தேடலும் இல்லை என்றும், எதையும் திட்டமிட்டுச் செய்ய முயல்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் தான் திட்டமிட்டுச் செய்த காரியங்களை விட, எதிர்பாராமல் செய்த விஷயங்களே மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளன. இதனால் வாழ்க்கையைத் திட்டமிடுவதையே முற்றிலும் கைவிட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.

சல்மான்கான் பூஜா ஹெக்டே

வாழ்க்கையை அதன் போக்கிலேயே ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வரும் அவர், கதைகளைக் கேட்பதிலும் இதே பாணியைப் பின்பற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார். திரைப்படக் கதைகளைக் கேட்கும்போது தனக்கு அது பிடிக்கிறதா இல்லையா என்பதை உடனடியாகத் தீர்மானித்துத் தனது முடிவைச் சொல்லிவிடுவதாகத் தெரிவித்துள்ளார்.