டெல்லி இளைஞர்கள் போராட்டத்திற்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு!

 
ப்ரீத்தி ஜிந்தா

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் நடைபெறும் CJP இளைஞர் அமைப்பினரின் போராட்டத்திற்கும், லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் பாலிவுட் பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். கல்வித் துறையில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்திப் போராடும் இளைஞர்களின் குரலுக்கு அரசு மதிப்பளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லி நீட்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கும் சோனம் வாங்சுக்கிற்கும் ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள நடிகை ப்ரீத்தி ஜிந்தா, "நமது நாட்டின் கல்வி முறையை மேம்படுத்துவதற்காகவும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகவும் வீதியில் இறங்கிப் போராடும் இளைஞர்களுடனும், சோனம் வாங்சுக்கையுடனும் மத்திய அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி

டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலிவுட் திரையுலகில் இருந்து நடிகை ப்ரீத்தி ஜிந்தா மாணவர்களுக்கு ஆதரவாக வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளது அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே கவனம் பெற்றுள்ளது.