மூத்த நடிகை புஷ்பலதா காலமானார்... தமிழ் திரையுலகில் பெரும் சோகம்!

 
புஷ்பலதா புஷ்பலதா


நடிகர் ஏ.வி.எம். ராஜனின் மனைவி நடிகை புஷ்பலதா. வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைபாடு காரணமாக நடிகை புஷ்பலதா காலமானார். அவருக்கு வயது 87. சென்னையில் வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார்.

புஷ்பலதா

தமிழில் 1961ல்  கொங்கு நாட்டு தங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன் உட்பட  பலருடன் நடித்து புகழ் பெற்றவர். 1963ம் ஆண்டு மெயின் பி லட்கி ஹூன் என்ற ஹிந்தி படத்தில் நடித்த புஷ்பலதா, நர்ஸ் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

புஷ்பலதா
சகலகலா வல்லவன், நான் அடிமை இல்லை போன்ற படங்களிலும் துணைப் பாத்திரத்திலும் நடிகை புஷ்பலதா நடித்துள்ளார். அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!