நடிகை ராஷ்மிகாவுக்கு விபத்து... ரசிகர்களுக்கு உருக்கமான அட்வைஸ்!
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை ராஷ்மிகா கடந்த இரண்டு வாரங்களாக எந்த பதிவும் போடாதது குறித்து சர்ச்சை கிளம்பிய நிலையில், தான் விபத்தில் சிக்கி இருந்ததாகவும், அனைவரும் வாழ்க்கையை நேசியுங்கள் என்றும் தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் நடிகை ராஷ்மிகா.
அந்த பதிவில், “நாளை நாம் இருப்போமோ எனத் தெரியாது. அதனால், இன்று நாம் இருக்கும் தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்” என நடிகை ராஷ்மிகா மந்தனா பதிவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான ராஷ்மிகா தற்போது பாலிவுட்டில் அதிக படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்துகிறார். 'அனிமல்’ படத்தை அடுத்து தற்போது சல்மான்கான் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘சிக்கந்தர்’ படத்தில் நடிக்கிறார். சமூகவலைதளங்களிலும் செம ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா கடந்த சில வாரங்களாக அமைதியாகவே இருந்தார். ’ராஷ்மிகாவுக்கு என்ன ஆச்சு?’ என கேள்வி எழுப்பிய ரசிகர்களுக்கு அவர் பதில் கொடுத்திருக்கிறார்.

தன்னுடைய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, ‘கடந்த மாதத்தில் நான் பெரிதாக ஆக்டிவாக இல்லை. அதற்குக் காரணம் எனக்கு ஏற்பட்ட சிறு விபத்துதான். நான் சீக்கிரம் குணமாக வேண்டும் என்றால் மருத்துவர்கள் என்னை வீட்டிலேயே ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தினார்கள். இப்போது ஓரளவு பரவாயில்லை. உங்கள் நலன் மீது எப்போது அக்கறை கொள்ளுங்கள். ஏனெனில், வாழ்க்கை சிறியது. வேகமாக நகர்ந்துவிடும். நாளை நாம் இருப்போமோ என்று கூடத் தெரியாது. அதனால், இன்று மகிழ்ச்சியாக இருப்பதைத் தேர்ந்தெடுங்கள்’ எனக் கூறியிருக்கிறார்.
