சொகுசு ஹோட்டலில் விபச்சாரத்தில் சிக்கிய முன்னணி நடிகை மீட்பு - பெண் வக்கீல் உட்பட இடைத்தரகர்கள் கைது!

 
சினிமா ஆசைகாட்டி விபச்சாரம்! அதிர வைத்த பட தயாரிப்பாளர்! சுற்றி வளைத்த போலீசார்!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தானே மாவட்ட ஹோட்டல்களில், சொகுசு மற்றும் திரைத்துறையின் பின்னணியில் ரகசியமாக நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத பாலியல் தொழில் நெட்வொர்க்குகளை ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி முறியடித்துள்ளனர். இந்த சோதனைகளில் மகாராஷ்டிர சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் ஒரு பெண் வழக்கறிஞர் உள்ளிட்டோர் சிக்கியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில், சினிமா வாய்ப்புகளைத் தருவதாகக் கூறி நடிகைகளை வைத்துப் பாலியல் தொழில் நடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார், அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

அழகிகள் விபச்சாரம் உல்லாசம் மசாஜ் பாலியல்

இந்தச் சோதனையின் போது, மகாராஷ்டிர திரையுலகின் (மராத்தி சினிமா) முன்னணி நடிகை ஒருவரும், பெங்காலி மொழித் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்து வரும் மற்றொரு துணை நடிகையும் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டுப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் இருவரும் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்தத் திரைத்துறை நெட்வொர்க்கை திரைமறைவில் இயக்கி வந்த முக்கிய இடைத்தரகரான மேக்கப் கலைஞர் ஒருவரைக் காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். கைதான இந்த நபருக்குப் பல்வேறு முன்னணி சினிமா பிரபலங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதற்கிடையே, மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள மற்றொரு ஓட்டலிலும் இத்தகைய சட்டவிரோத நெட்வொர்க் ஒன்று செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்யாண் பகுதி ஓட்டலில் பெண் வழக்கறிஞர் ஒருவர் பாலியல் தொழிலை ஒருங்கிணைத்து நடத்துவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சாதாரண உடையில் வாடிக்கையாளர்கள் போலச் சென்று அங்கு ரகசியச் சோதனையில் ஈடுபட்டனர்.

சினிமா ஆசைகாட்டி விபச்சாரம்! அதிர வைத்த பட தயாரிப்பாளர்! சுற்றி வளைத்த போலீசார்!

கடந்த 3 மாதங்களாக இந்தச் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்த அந்தப் பெண் வக்கீலை போலீசார் கைது செய்தனர். வறுமை மற்றும் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பெண்களைக் குறிவைத்து, அவர்களுக்குப் பண ஆசை காட்டி அவர் கட்டாயப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஓட்டல் சோதனையின் போது அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

திரைத்துறை மற்றும் சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் இந்தச் சட்டவிரோத நெட்வொர்க்குகளில் பின்னணியாக இருப்பது மும்பையில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மீட்கப்பட்ட நடிகைகள் மற்றும் பெண்களைப் போலீசார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மேக்கப் கலைஞர் மற்றும் பெண் வழக்கறிஞரிடம், இந்த மாஃபியா கும்பலின் பின்னணியில் உள்ள பிற முக்கியப் புள்ளிகள் மற்றும் சர்வதேச ஆள் கடத்தல் கும்பல்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் மும்பை குற்றப்பிரிவு போலீசார் தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.