சின்னத்திரை நடிகை ரித்திகாவுக்கு வளைகாப்பு... நேரில் குவிந்த பிரபலங்கள்!

 
சின்னத்திரை நடிகை ரித்திகாவுக்கு வளைகாப்பு...  நேரில் குவிந்த பிரபலங்கள்!

விஜய் டிவி சீரியல்நடிகை ரித்திகாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த நிலையில், சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’பாக்கியலட்சுமி’ சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் ரித்திகா. இவருக்குத் வினு என்பவருடன் கடந்த 2022ல் திருமணம் ஆனதால் ’பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகினார். இருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ போன்ற சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். பின்பு, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தவர் சில காலம் மீடியாவுக்கு பிரேக் எடுத்துள்ளார். இப்போது அவருக்கு வளைகாப்பு நடந்திருக்கிறது.

இதில் விஜய் டிவியை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக, ரித்திகாவின் நெருங்கிய நண்பர்களான அம்மு அபிராமி, பார்திவ் மணி, பாடகர் அஜய் கிருஷ்ணா, நடிகை ஸ்ரீதேவி எனப் பலரும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை இந்த ஜோடிக்குத் தெரிவித்துள்ளனர். இந்தப் புகைப்படங்களை ரித்திகா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!