ஆந்திராவில் தேர்வு முறைகேடு: நடிகை ரோஜா உண்ணாவிரதப் போராட்டம்!
ஆந்திர மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் தேர்வுக்கான டி.எஸ்.சி. (DSC) வினாத்தாள் கசிவு மற்றும் விளையாட்டு இடஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாகச் சி.பி.ஐ. விசாரணை கோரி போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ஆந்திர மாநிலம் நகரியில் நடிகை ரோஜா தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் குறித்து உடனடியாகச் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இத்தேர்வு முறைகேடுகள் குறித்து நேர்மையான மற்றும் நடுநிலையான விசாரணை நடைபெற வேண்டும் என்றால், மாநிலக் கல்வி அமைச்சர் நாரா லோகேஷ் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ரோஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
