வைரல் வீடியோ... நடிகை சாய் பல்லவி உறவினர் இல்லத் திருமணத்தில் உற்சாக நடனம்!

 
சாய் பல்லவி

பிரபல முன்னணி திரைப்பட நடிகை சாய் பல்லவி . இவர் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்.  பெற்றோர், சகோதரி என குடும்ப உறுப்பினர்கள் வெளி மாவட்டங்களில் வசித்து வந்தாலும், நீலகிரியில் நடைபெறும் சாய்பல்லவியின் சமுதாய கோயில் திருவிழாக்கள், உறவினர்களின் திருமண நிகழ்ச்சிகள் இவைகளில்  கலந்து கொண்டு சிறப்பித்து  வருகிறார்.

 2024ல் இங்கு  நடைபெற்ற ஹெத்தையம்மன் திருவிழாவில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய  உடையாக கருதப்படும் வெள்ளை நிற உடையில் வெள்ளி ஆபரணங்கள் அணிந்து கலந்து கொண்டார்.  சாய்பல்லவி திருவிழாக்களில் மக்களோடு மக்களாக சேர்ந்து நடனமாடுவது, உறவினர்களுடன் செல்ஃபி எடுப்பது என மக்களையும் உற்சாகப்படுத்தி  வருகிறார்

சாய் பல்லவி

இந்நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள மேல் அனையட்டி படுகர் கிராமத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  திருமணத்தில் இசைக்கப்பட்ட பேண்டு வாத்தியத்திற்கு உறவினர்களுடன் சேர்ந்து உற்சாக நடனம் ஆடினார்.  மேலும் கிராம மக்களோடு புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.


இது குறித்து கிராம மக்கள், " ஷூட்டிங் பிஸியிலும் ஊர் பண்டிகை, உறவினர்களின் சுக, துக்க நிகழ்வுகளில் எளிமையாக கலந்து கொள்வது   அவரின் வழக்கம். அப்படித்தான் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மிகப்பெரிய நடிகையாக இருந்தாலும் ஊர் மக்களுடன் ஒன்றிணைந்து மிகவும் எதார்த்தமாக நடனமாடி உணவருந்தி செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது" எனக் கூறியுள்ளனர்.

From around the web