நடிகை ஷகீலாவுக்கு அறுவை சிகிச்சை - பொதுமக்கள் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டுகோள்!

 
ஷகீலா

நடிகை ஷகீலாவுக்குக் கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள செய்தி ரசிகர்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிக நேரம் தொடர்ச்சியாகச் செல்போன் பயன்படுத்தியதால் அவரது கழுத்துப் பகுதியில் தீவிரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவருக்குக் கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டு, தற்போது அவர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்.

ஷகீலா

சிகிச்சைக்குப் பின் பேசிய நடிகை ஷகீலா,  பொதுமக்கள் அனைவரும் தங்களின் தினசரிச் செல்போன் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதைப் பெற்றோர்கள் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஷகீலா

கடைசியாக கடந்த ஆண்டு வெளியான 'மெட்ராஸ் மாஃபியா கம்பெனி' படத்தில் நடித்திருந்த நடிகை ஷகீலாவின் இந்த விழிப்புணர்வு அறிவுரை சமூக வலைத்தளங்களில் கவனத்தைப் பெற்று வருகிறது.