நடிகை சிவாங்கிக்கு திருமணம்?! அவரே வெளியிட்ட தகவல்!

 
சிவாங்கி
நடிகை சிவாங்கிக்கு விரைவில் திருமணம் நடைப்பெற இருப்பதால் ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.  குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை சிவாங்கியின் திருமணம் குறித்த பதிவுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களையும், ஷேர்களையும் வாரி வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

விஜய் டிவியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பலர் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரையில் நடிகையாகவும் பாடகியாகவும் மாறி இருக்கும் சிவாங்கி ஆரம்பத்தில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாட்டு பாட போட்டியாளராக அறிமுகம் ஆகி இருந்தார். ஆனால் அதில் அவர் எதிர்பார்க்காத வகையில் வெளியேற்றப்பட்டிருந்தார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து, சிவாங்கிக்கு இன்னொரு பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 2019-ம் ஆண்டு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி சமைக்கவே தெரியாத கோமாளியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் சிவாங்கியை இன்னும் நன்றாக தெரிந்து கொள்ள மக்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவரை கலாய்த்தவர்களுக்கு கூட, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இவரை பிடிக்க ஆரம்பித்தது. 

சிவாங்கி

துருதுரு பேச்சு, சத்தமான சிரிப்பு என தனது இயல்பான குணாதிசயங்களினாலேயே சிவாங்கி அனைவரையும் ஈர்த்தார். குக் வித் கோமாளி 2வில் போட்டியாளராக பங்கேற்ற அஷ்வின் மீது இவருக்கு காதல் இருப்பதாக கூறப்பட்டது. சிவாங்கி, தற்போது ஒரு பக்கம் மேடை நிகழ்ச்சிகள், ஒரு பக்கம் படங்களில் பாடுவது என படுபிசியாக இருக்கிறார். 

இந்த நிலையில், சிவாங்கி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று அவரது திருமணம் குறித்த வதந்தியை கிளப்பிவிட்டுள்ளது. 

அந்த பதிவில், “சோஷியல் மீடியாவை திறந்தாலே யாருக்காவது திருமணம், நிச்சயதார்த்தம், குழந்தைப் பிறக்கப் போகிறது என எதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. என் நண்பர்களுடைய பதிவும் அப்படித்தான் இருக்கிறது. அப்போது நானும் அந்த கட்டத்திற்கு வந்து விட்டேனா?” எனக் கேட்டுள்ளார்.

சிவாங்கி

சிவாங்கியின் இந்தப் பதிவைப் பார்த்த பலரும் சிவாங்கிக்குத் திருமண ஆசை வந்துவிட்டது எனக் கூறி ‘சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க!’ என கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் திருமணம் உறுதியானதைத்தான் இப்படி மறைமுகமாகச் சொல்கிறாரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web