திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை சுனைனா .. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Oct 20, 2023, 22:01 IST

நடிகை சுனைனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் நீர்ப்பறவை, காதலில் விழுந்தேன் , லத்தி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து சுனைனா பிரபலமடைந்தார். அண்மையில் வெளியான 'ரெஜினா' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை சுனைனா. இந்தப்படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்தது.
இந்த நிலையில் நடிகை சுனேனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், அவருக்கு ட்ரிப்ஸ் ஏற்றுவதற்கான டியூப்பும், மூக்கில் ஆக்ஸிஜன் செலுத்துவதற்கான டியூப்பும் இணைக்கப்பட்டுள்ளது. எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலை சுனைனா வெளியிடவில்லை. நடிகை சுனைனா நலம் பெற வேண்டி ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
From around the
web