நிர்வாண வீடியோவைக் காட்டி மிரட்டல்... ரூ.2 கோடி பணம் பறிப்பு.. பிரபல நடிகை காவல் நிலையத்தில் புகார்!

 
ஹர்ஷா சாய்

நிர்வாண புகைப்படங்களையும், வீடியோக்களையும் காட்டி  மிரட்டி வருவதாகவும், இது வரை ரூ.2 கோடி வரை பணம் பறித்துள்ளதாகவும் பிரபல நடிகை, யூ டியூபர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தெலுங்கானாவில் உள்ள நர்சிங்கி காவல்நிலையத்தில் பதிவான ஒரு வழக்கில், ஹர்ஷா சாய்  பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், நடிகையின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் புகார்கள் கூறப்பட்டுள்ளன. மும்பையைச் சேர்ந்த 25 வயது நடிகை,  ஹர்ஷா சாய் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் ஹர்ஷா சாய் இன்னும் கைது செய்யப்படவில்லை.

காவல்துறையினரின் கூற்றுப்படி, நடிகையும் ஹர்ஷா சாயும் ஒரு பரஸ்பர நண்பரின் விருந்தில் ஒருவரையொருவர் சந்தித்து அறிமுகமானார்கள். நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தனர். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஹர்ஷா சாய் ஆசை காட்டியுள்ளார். மேலும் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டியதாகவும் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

இவர் ஆந்திர மாநிலம் விஜயநகரைச் சேர்ந்த யூடியூபராக உள்ளார். கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, அவர் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு, வைரலாகும் வகையில் நிறைய உள்ளடக்கங்களை வெளியிட்டு யூடியூப்பில் நுழைந்தார். 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை முழுமையாக 5 ரூபாய்க்கு  வழங்குவது, பேய் வீட்டில் தங்குவது போன்ற பிரபலமான வீடியோக்களை வெளிநாட்டு சேனல்களில் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

பின்னர், ஏழைகளை நட்சத்திர ஓட்டலில் தங்க வைப்பது, ஏழை மாணவருக்கு சைக்கிள் வழங்குவது, விவசாயிக்கு வீடு கட்டுவது, ஆயிரம் பேருக்கு பெட்ரோல் நிரப்புவது போன்ற வீடியோக்கள் மூலம் லட்சக்கணக்கான ஃபாலோயர்களை கவர்ந்தார். இவர் தெலுங்கில் எடுத்த வீடியோக்கள் தமிழ் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு தனித்தனி சேனல்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web