நடிகை த்ரிஷாவுக்கு ரகசியத் திருமணமா? - தீயாய் பரவும் செய்தி!
தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியான நடிகை திரிஷா பகிர்ந்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
நடிகை ராதிகா சரத்குமாருடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றை நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் திரிஷா தனது கழுத்தில் அணிந்திருந்த செயின் லாக்கெட்டை மட்டும் 'ஹார்ட்' எமோஜி கொண்டு மறைத்திருந்தார். இதைக் கவனித்த நெட்டிசன்கள், அந்த லாக்கெட் கிறிஸ்தவ முறைப்படி திருமணத்தின் போது அணியப்படும் 'மின்னு' வடிவில் இருப்பதாகக் கூறி, அவருக்கு ரகசியத் திருமணம் முடிந்துவிட்டதா எனத் தீவிரமாக விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், இது குறித்து நடிகை திரிஷா தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பதால், இது வெறும் இணைய வதந்தியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
