சின்னத்திரை நடிகை வினுஷா தேவி திருமணம் இனிதே நடைபெற்றது: குவியும் வாழ்த்துகள்!
Aug 31, 2026, 08:45 IST
'பாரதி கண்ணம்மா' சீரியல் புகழ் நடிகை வினுஷா தேவி, தனது நீண்டநாள் காதலரான லிங்கேஸ்வரனைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்களது திருமணம் நேற்று உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
மாடலிங் மற்றும் விளம்பரப் படங்கள் மூலம் திரைத்துறையில் நுழைந்த வினுஷா தேவி, விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான 'பாரதி கண்ணம்மா' தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெரும் புகழ்பெற்றார்.

சீரியல்கள் மட்டுமின்றி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ள வினுஷா தேவிக்கு, சக சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
