அதிர்ச்சி வீடியோ!! கார் விபத்தில் சிக்கி நூலிழையில் தப்பிய நடிகை!!

 
வைஷாலி


பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில்  'ராஜா ராணி', 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' , 'மாப்பிள்ளை' ஆகிய சீரியல்களில் நடித்தவர்   நடிகை வைஷாலி. இவர் தற்போது 'முத்தழகு' சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.

இது குறித்த  விஷயத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில்  சமீபத்தில்  தென்காசியில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராத விதமாக இந்த கார் விபத்துக்கு உள்ளானது.    

வைஷாலி

சீட் பெல்ட் போட்டிருந்தாலும், ஏர் பேக் சரியாக வேலை செய்ததால் தான் என் உயிர் தப்பியது.  இந்த கோர  விபத்தில் அவரது கழுத்தில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த அவரது தகவலை அடுத்து  அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web