சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை!

 
பாலியல் பலாத்காரம் சிறுமி

 

சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த 38 வயதான சீரியல் நடிகை, கணவரைப் பிரிந்து தனது மகன் மற்றும் தந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சீரியல் நடிகையின் தோழி மூலமாக ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஷேக் முத்தலிஃப் (வயது 43) மற்றும் கே.கே.நகரைச் சேர்ந்த சுரேஷ் கண்ணா ஆகியோருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சீரியல் நடிகையிடம் "நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள்" என்று கூறி, Human Rights Wings Foundation என்ற அமைப்பை Human Rights Commission என்று அறிமுகப்படுத்தி, அதன் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் பகுதிக்கு சீரியல் நடிகையை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

ஆபாச வீடியோ

அங்கு சென்றதும், ஷேக் முத்தலிஃப், சீரியல் நடிகையிடம் சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பു ஏற்படுத்தி தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதனை செல்ஃபோனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை வைத்து சீரியல் நடிகையை மிரட்டி ரூ.2 லட்சம் பணம் மற்றும் 11 சவரன் தங்க நகைகளை வாங்கியுள்ளனர்.ையடுத்து, ஷேக் முத்தலிஃப்பிடம், சீரியல் நடிகை கொடுத்த பணத்தை திரும்ப கேட்கச் செல்லும் போதெல்லாம், சுரேஷ் கண்ணா, முத்தலிஃப்பிற்கு துணையாக இருந்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சீரியல் நடிகை கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி மதுராந்தகம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

செல்போன் சிசிடிவி ஆபாச வீடியோ புகைப்படம்

அங்கு கடந்த ஜூலை 25ஆம் தேதி இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய ஷேக் முத்தலிஃப்பை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ் கண்ணாவை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.