“பிடிக்காத விஷயங்களுக்கு நடிகைகள் ‘நோ’ சொல்லப் பழக வேண்டும்” - நடிகை அனன்யா பாண்டே!

 
நடிகை அனன்யா பாண்டே

திரைப்படத் துறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதனைகளையும் சோதனைகளையும் மாறி மாறிச் சந்தித்து வரும் சூழலில், தங்களுக்குப் பிடிக்காத விஷயங்களுக்கு நடிகைகள் ‘நோ’ சொல்லப் பழக வேண்டும் எனப் பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார். திரை வாழ்க்கையில் தான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம் இதுதான் எனக் குறிப்பிட்டுள்ள அவர், கருத்துகளைத் துணிச்சலாக வெளிப்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வரும் அனன்யா பாண்டே, அண்மையில் அளித்த பேட்டியில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, தமக்கு விருப்பமில்லாத அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தும் விஷயங்களுக்கு மறுப்புத் தெரிவிக்கும் துணிச்சலை நடிகைகள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை

“எனக்குப் பிடிக்காத அல்லது ‘வேண்டாம்’ என்று நினைக்கும் விஷயங்களுக்குத் தயங்காமல் ‘நோ’ என அழுத்தமாகச் சொல்லிவிடுவதுதான் நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம்” என அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார்.

சக நடிகைகளுக்கும் பெண்களுக்கும் அறிவுரை வழங்கும் விதமாகப் பேசிய அவர், தங்களுக்கு உடன்பாடில்லாத விஷயங்களை ஆரம்பத்திலேயே மறுத்துவிடுவது தேவையற்ற அழுத்தங்களையும் பல பிரச்சினைகளையும் தவிர்க்க உதவும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்களின் விருப்பங்களையும் கருத்துகளையும் வெளிப்படையாகவும் உறுதியாகவும் முன்வைப்பதன் மூலம், திரைத்துறையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிம்மதியுடனும் பாதுகாப்புடனும் பயணிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.