இன்று மாலை முதல் கிளாம்பாக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம் - விடுமுறை நிறைவால் அலைமோதும் கூட்டம்!
விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்பும் வசதிக்காக, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்குக் கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் எனச் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்புவோருக்குப் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் ஏற்படாத வகையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வழக்கமான பேருந்து சேவைகளுடன் சேர்த்து, இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் 50 சிறப்புப் பேருந்துகள் மூலம் மொத்தம் 400 கூடுதல் இயக்கங்கள் இயக்கப்படவுள்ளன.
மேலும், பயணிகளின் வருகைக் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு நாளை அதிகாலை முதல் கூடுதலாக மேலும் 150 பேருந்து இயக்கங்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
