ஆப்கானிஸ்தான் பள்ளியில் பயங்கர வெடிவிபத்து... 7 பேர் பலி, 90 பேர் காயம்!

 
ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள குனார் மாகாணத் தலைநகர் அசாதாபாத் புறநகரில் உள்ள அந்தர் செர் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் இன்று காலை 10 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 90-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சுரங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மாகாணத் தகவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான்: பள்ளியில் ஏற்பட்ட வெடி வெடிப்பில் 7 பேர் உயிரிழப்பு; 90-க்கும் மேற்பட்டோர் காயம்

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 15 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்; மற்றவர்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர்