ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்... பீதியில் பொதுமக்கள்!

 
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

 

ஆப்கானிஸ்தானில் இன்று (அக்.11) ஒரே நாளில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 4.2 மற்றும் 4.1 ஆகப் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் நில அதிர்வுகள் குறித்த கவனம் அதிகரித்துள்ளது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.41 மணியளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம், பூமிக்கு அடியில் சுமார் 181 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகப் பதிவானதாக இந்திய தேசிய நில அதிர்வு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அசாம் நிலநடுக்கம்

இதைத்தொடர்ந்து, இன்று மதியம் 12.34 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவானது. இதன் மையம் பூமிக்கு அடியில் சுமார் 161 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ள நிலையில், உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்

நிலநடுக்கத்தின் பாதிப்பு அதன் அளவு மட்டுமின்றி, மையத்தின் ஆழம், மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து உள்ள தொலைவு உள்ளிட்ட காரணிகளையும் பொறுத்து மாறுபடும். நில அதிர்வு தொடர்பான கூடுதல் தகவல்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.