3 நாட்களுக்கு பிறகு குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி... உற்சாக குளியல் போட்ட சுற்றுலாப் பயணிகள்!

 
குற்றாலம்

 தமிழகத்தில்   வடகிழக்கு பருவமழை காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. இதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக  குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

குற்றாலம்

இதனால் பழைய குற்றாலம், மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 4 வது நாளாக இந்த தடையானது நேற்றும்  நீடித்ததால்  அருவிகளுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.  

குற்றாலம்

இந்நிலையில் குற்றால அருவியில் 3 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் தற்போது குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவியில் நீர்வரத்து சீரான விழுந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web