30 ஆண்டுகளுக்குப் பின் மேஷத்தில் சனி பெயர்ச்சி... இந்த 4 ராசிகளுக்குக் கோடீஸ்வர யோகம்!
ஜோதிட சாஸ்திரத்தில் நீதியை வழங்கும் கிரகமாகவும், மிக மெதுவாகச் சஞ்சரிக்கும் கிரகமாகவும் சனி பகவான் போற்றப்படுகிறார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார். அந்த வகையில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற 2027-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாகவுள்ளார். இந்த அபூர்வமான மேஷச் சனி பெயர்ச்சியால் பிரம்மாண்டமான அதிர்ஷ்டத்தையும், யோகங்களையும் பெறவுள்ள 4 ராசிகள் குறித்துக் கீழே விரிவாகப் பார்ப்போம்.
மிதுனம் : புதிய வருமான வழிகள் திறக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்களும், பல வருடங்களாக முடங்கிக் கிடந்த பழைய முதலீடுகளிலிருந்து எதிர்பாராத மிகப்பெரிய லாபமும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும், புதிய பொறுப்புகளும் தேடிவரும். தொழிலதிபர்களுக்கு லாபகரமான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் மற்றும் பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகம் பிரகாசமாக உள்ளது.

சிம்மம்: சனி பெயர்ச்சியால் உங்களுக்குத் தொட்டதெல்லாம் துலங்கும். நிலுவையில் இருந்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி முடிவடையும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் முழு ஆதரவும் பாராட்டுகளும் கிடைக்கும். புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
தனுசு : நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த நல்ல வேலைவாய்ப்பு அமையும். அரசுப் பணிக்குத் தயாராகும் மாணவர்களுக்கும், போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் நல்ல செய்திகள் தேடிவரும். தொழிலதிபர்கள் தொழிலை விரிவுபடுத்தப் பெரிய அளவிலான முதலீடுகளை தைரியமாகச் செய்வார்கள். வருமானம் கணிசமாக உயர்ந்து நிதி நிலைமை மிகவும் வலுவடையும்.

கும்பம் : புதிய தொழில் தொடங்குவதற்கு இது மிகச் சிறந்த காலகட்டமாக அமையும். நீங்கள் சிந்திக்கும் திட்டங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய வீடு, நிலம், வாகனம் மற்றும் தங்கம்/நகை வாங்கும் யோகம் பிரகாசமாக உள்ளது. வெளிநாடு சென்று படிக்க வேண்டும் அல்லது வேலை செய்ய வேண்டும் என்ற பல நாள் கனவு நனவாகும். உழைப்பிற்கேற்ற நற்பலன்களும் சமூகத்தில் தனி மரியாதையும் கிடைக்கும்.
