471 நாட்கள் சிறை வாசம் முடிந்தது... நாளை திமுக மும்பெரும் விழாவில் பங்கேற்கிறார் செந்தில் பாலாஜி!

 
விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு! அமைச்சர் செந்தில் பாலாஜி !
முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு இன்று வெளியே வருகிறார் செந்தில் பாலாஜி. 

நாளை திமுக முப்பெரும் விழா காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள நிலையில், நாளை முப்பெரும் விழாவில் செந்தில் பாலாஜி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளும் இந்த விழாவில் பல கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள செந்தில்பாலாஜியும் கலந்து கொள்வது திமுகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்பார்த்திருந்த காலம் கனிந்ததால் இனி விரைவில்  அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

செந்தில் பாலாஜி

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திமுக, செந்தில் பாலாஜி வழக்கில் உச்சக்கட்ட டென்ஷனில் இருந்து வந்த நிலையில், தற்போது திமுக தொண்டர்களிடையேயும் உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது. 

நாளை நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் செந்தில் பாலாஜி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என்று நீதிமன்றம் எதுவும் உத்தரவு பிறப்பிக்காத நிலையில், அமைச்சரவை மாற்றத்தில் செந்தில்பாலாஜியின் பெயரும் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உதயநிதி துணை முதல்வர் பதவி குறித்தும், அமைச்சரவையில் ஏற்பட உள்ள மாற்றம் குறித்தும், செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்காக முதல்வர் காத்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், இன்றைய தீர்ப்பு திமுகவினரிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. 

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி  கைது செய்யப்பட்டார். இதுவரை 58 முறைக்கும் மேல் அவருடைய காவல் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், இவர் அளித்திருந்த ஜாமின் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.  

செந்தில்

இதனால் கடந்த ஒராண்டுக்கும் மேலாக  சிறையிலேயே தண்டனை அனுபவித்து வரும் அவர், இன்றைய தீர்ப்பை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார். செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்ய நேரிடும் என்பதால், ஜாமின் கிடைத்ததும் அமைச்சரவை மாற்றத்தை ஒரே நேரத்தில் செய்து கொள்ளலாம் என்று முதல்வர் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்பட்டது. 

கடந்த மார்ச் மாதம் ஜாமின் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது.  

இந்த மனு மீதான விசாரணைகள் சுமார் 6 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று செப்டம்பர் 26ம் தேதி காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web