6 வருடம் காதலித்து, ஊர்சுற்றி வேறொருவனுடன் நிச்சயதார்த்தம்... காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற காதலன்!

 
உபி

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், வேறொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஏற்பட்ட தகராறில் 25 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீரட்டின் லிசாரி கேட் பகுதியைச் சேர்ந்த சமீரின், அங்குள்ள கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்தார். அவருக்கும் ஃபிரோஸ் என்பவருக்கும் சுமார் ஆறு ஆண்டுகளாகக் காதல் உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சமீரின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயித்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

கடந்த வியாழக்கிழமை சமீரினைச் சந்திக்க அழைத்துச் சென்ற ஃபிரோஸ், திருமண விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அவரது உடலை பிஜ்லி பம்பா பைபாஸ் அருகேயுள்ள வனப்பகுதியில் போட்டுவிட்டு, காவல் உதவி எண் 112-ஐ அழைத்து சம்பவத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் ஃபிரோஸைக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்