டெல்லி, கர்நாடகாவைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் வேகமெடுக்கும் பன்றிக்காய்ச்சல் பரவல் - 146 பேருக்கு பாதிப்பு உறுதி!

 
பன்றிக்காய்ச்சல் மருத்துவமனை  மாஸ்க்

டெல்லி மற்றும் கர்நாடக மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது ராஜஸ்தானிலும் பன்றிக்காய்ச்சல் பரவல் தீவிரமடைந்து வருவதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் நடப்பு ஆண்டு ஜனவரி முதல் இதுவரை மொத்தம் 146 பேருக்குப் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் வெறும் 2 பேருக்கு மட்டுமே இருந்த தொற்று, தற்போது ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 55 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு எச்1 என் 1 பன்றிக்காய்ச்சல்

நோயாளிகளைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைகள் அனைத்தும் முழுத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கஜேந்திர குமார் கிம்சார் அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அடிக்கடி கைகளைக் கழுவுவதுடன் சுவாசத் தொற்று உள்ளவர்களிடம் இடைவெளியைப் பேண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல் அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.