டெல்லியை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வேகமாகப் பரவும் பன்றிக்காய்ச்சல்... சுகாதாரத் துறை எச்சரிக்கை!
டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வேகமாக பன்றிக்காய்ச்சல் பரவுகிறது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவும் நிலையில் பொது சுகாதாரத் துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஜனவரி மாதத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு என்பது குறைவாகவே காணப்பட்டது.

ஜனவரியில் 19 பேருக்கு மட்டுமே பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது 339 பேராக உயர்ந்துள்ளது. இந்த நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதன் மூலம் இந்த நோயின் தீவிரத்தன்மையைக் குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
