ஜாகிர் நாயக் அமைப்புக்கு எதிராக ... மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய புதிய அதிகாரம்!

 
ஜாஹீர்

  தடை செய்யப்பட்ட ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை (IRF) அமைப்பிற்கு எதிராகச் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் நேரடி நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்துள்ளது. தேசப் பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி இந்த அமைப்பு மீதான தடையை ஒன்றிய அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்திருந்த நிலையில் இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Zakir Naik's IRF In Centre's Crosshairs: States, UTs Get UAPA Powers To Act | Times Now

இதன் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 7 மற்றும் 8 ஆகிய பிரிவுகளின் கீழ் மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக, தடை செய்யப்பட்ட அமைப்பிற்குச் சொந்தமான அல்லது பயன்பாட்டில் உள்ள நிதி ஆதாரங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்கவும், சந்தேகத்திற்குரிய இடங்களில் சோதனை நடத்தி சீல் வைக்கவும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Centre expands crackdown on Zakir Naik's IRF, empowers states to act on funds and properties - India TV News

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பிற்கு எதிராக மாநில அளவில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், நிதிப் பரிவர்த்தனைகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது