அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம்.. விண்ணப்பதாரர்களுக்கு இந்திய ராணுவம் முக்கிய அறிவுறுத்தல்!
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இணையவழி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம் தொடர்பான முக்கிய அறிவிப்பை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
சென்னை மண்டல ராணுவத் தலைமையகத்தின் மூலம் நடத்தப்படும் இந்த அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 1 முதல் 10 வரை புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த தகுதியான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம்.

இணையவழி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்த இரண்டாம் கட்ட உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
ராணுவத்தின் அறிவுறுத்தல்: தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களின் அழைப்புக் கடிதம் மற்றும் தேவையான அசல் ஆவணங்களுடன் உடற்தகுதித் தேர்வுக்குத் தாமதமின்றி உடனடியாகத் தயாராகுமாறு ராணுவ ஆள்சேர்ப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.
