சுடுகாட்டில் எரியும் பிணத்தின் மாமிசத்தை வாளால் எடுத்து உண்ணும் பெண்... நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ!
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி பகுதியில் உள்ள சுடுகாடு ஒன்றில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. எரியும் சிதையிலிருந்து மனித மாம்சத்தை வாளால் எடுத்து உண்ணும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் தீவிரமான விசாரணையைத் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.
பரவி வரும் அந்த வீடியோவில் சுடுகாட்டுப் பகுதியில் திருநங்கை அகோரி ஒருவர் ஈமக்கிரியைகள் நடக்கும் இடத்திற்கு அருகில் நிற்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த வீடியோ எந்தச் சுடுகாட்டில் எடுக்கப்பட்டது மற்றும் எப்போது பதிவு செய்யப்பட்டது போன்ற விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. புனிதமான உஜ்ஜைனி நகரில் இதுபோன்ற விசித்திரமான சம்பவங்கள் நடப்பது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிய இந்த அதிர்ச்சி காட்சிகளைக் கண்டு உஜ்ஜைனி பகுதியைச் சேர்ந்த ஆன்மீகத் தலைவர்களும் சாதுக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். புனித நகரத்தின் மரபுகளுக்குக் களங்கம் விளைவிக்கும் இந்தச் செயலில் ஈடுபட்ட நபர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் பின்னணி குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
