அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் லெட்டர் பேடில் ஓபிஎஸ் படம் - செங்கோட்டையன் கலாய்!

 
அக்ரி கிருஷ்ணமூர்த்தி செங்கோட்டையன்

சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசிக் கொண்டிருந்த போது, குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன் ஓபிஎஸ் குறித்து நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் லெட்டர் பேடைப் பார்த்ததாகவும், அதில் இன்னமும் ஓபிஎஸ் படம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் செங்கோட்டையன், "இடம் மாறியும் இன்னும் படம் மாறவில்லை" என்று கிண்டலாகக் கூறினார்.

அமைச்சரின் இந்த நகைச்சுவையான பேச்சு சட்டப்பேரவையில் சற்றே கலகலப்பான சூழலை ஏற்படுத்தி அனைவரையும் சிரிக்க வைத்தது.