வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத் ரத்னா விருது !

 
சுவாமிநாதன்

ஸ்வாமிநாதன் 1925ம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிறந்தார். கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் மா. கொ. சாம்பசிவன் மற்றும் பார்வதி தங்கம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகன் ஆவார். சுவாமிநாதனுக்கு 11 வயது இருக்கும்போது இவரது தந்தை இறந்ததால் . அதன்பின் சித்தப்பாவின் வளர்ப்பில் வளர்ந்தார்.

நரசிம்மராவ்
சுவாமிநாதன் கும்பகோணத்தில் உள்ள நேட்டிவ் உயர்நிலைப் பள்ளி (தற்போது நேட்டிவ் மேல்நிலைப்பள்ளி) மற்றும் சிறுமலர் உயர்நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்றார். சிறுவயதிலிருந்தே, இவர் விவசாயம் மற்றும் விவசாயிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். இவரது குடும்பம் நெல், மாம்பழம் மற்றும் தென்னை பயிரிட்டது. பயிர்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், வானிலை மற்றும் பூச்சிகள் பயிர்களுக்கும் வருமானத்திற்கும் ஏற்படுத்தக்கூடிய அழிவு உட்பட, இவரது குடும்பத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை இவர் கண்டார். சுவாமிநாதன் மருத்துவம் படிக்க வேண்டும் என்று இவரது பெற்றோர் விரும்பினர். இதை மனதில் கொண்டு, இவரை விலங்கியல் பிரிவில் சேர்ந்து உயர் கல்வியைத் தொடங்கினர். ஆனால், 1943ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது வங்காளப் பஞ்சம் மற்றும் துணைக் கண்டம் முழுவதும் அரிசி பற்றாக்குறையின் தாக்கங்களைக் கண்டபோது, ​​இந்தியாவுக்கு போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதில் இவர் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார்.

குடும்பப் பின்னணி, மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகியவை மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இவர் விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தார். சுவாமிநாதன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் விலங்கியல் துறையில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தார் , பின்னர் இவர் 1940 முதல் 1944 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தற்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் படித்தார் மற்றும் வேளாண் அறிவியலில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். இக்காலகட்டத்தில் வேளாண்மைப் பேராசிரியரான கோட்டா ராமசுவாமி அவர்களால் ஈர்க்கப்பட்டார்.



1947ல் சுவாமிநாதன் மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்றார்.[14] இவர் 1949ல் உயிரணு மரபியலில் உயர் தனித்துவத்துடன் முதுநிலை பட்டம் பெற்றார். உருளைக்கிழங்கில் குறிப்பிட்ட கவனம் செலுத்திய இவரது ஆராய்ச்சி சோலனம் பேரினத்தில் கவனம் செலுத்தினார். சமூக அழுத்தங்களால் இவர் இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் கவனம் செலுத்தினார். இதன் மூலம் இவர் இந்திய காவல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், இதே நேரத்தில், நெதர்லாந்தில் மரபியலில் ஆய்வு செய்ய யுனெஸ்கோ ஆய்வுநிதி கிடைத்ததால், விவசாயத் துறையில் இவரது கவனம் சென்றது. பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தியவர்.



இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர். வேளாண்மைத்துறைச் செயலாளர், நடுவண் திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர். மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்த எம்.எஸ். ஸ்வாமிநாதன், 28 ம்தேதி 2023ம் ஆண்டு காலமானர். பத்மஸ்ரீ(1967) ரமோன் மக்சேசே விருது (1971) பத்ம பூஷண் (1972) உலக உணவுப் பரிசு (1987) பத்ம விபூஷண் (1989) ஆகிய விருதுகளையும் பெற்றிருக்கிறார், இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்படவிருக்கிறது, இவரோடு சரண்சிங், பி.வி.நரசிம்மராவ் ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.

From around the web