அட கருமம்... நடுரோட்டில் தலைதெறிக்க நிர்வாணமாக ஓடிய நபர்... விஷயம் இது தானாம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஹோட்டல்களில் காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையின் போது, தப்பியோட முயன்ற நபர் ஒருவர் ஆடைகளின்றி நடுரோட்டில் ஓடிய வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் நாகார் பகுதியில் உள்ள சில வணிக வளாகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் பாலியல் தொழில் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடப்பதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தன. இந்தத் தகவலின் அடிப்படையில், அப்பகுதி உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து, அங்குள்ள 12-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் ஹோட்டல்களுக்குள் நுழைந்து ஒவ்வொரு அறையாகச் சோதனை செய்து கொண்டிருந்த போது, அங்குள்ள ஒரு விடுதி அறையில் இருந்த நபர் ஒருவர் போலீசாரைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சட்ட ரீதியான நடவடிக்கைக்குப் பயந்த அந்த நபர், காவல்துறையினரிடம் பிடிபடக் கூடாது என்ற பதற்றத்தில், தான் ஆடைகளை அணியவில்லை என்பதைக் கூடக் கவனிக்காமல் அறையை விட்டு வெளியேறி தலைதெறிக்க ஓடினார். தொடர்ந்து ஹோட்டல் வளாகத்தை விட்டு வெளியே வந்தவர், பொது மக்கள் நடமாட்டம் மிகுந்த நடுரோட்டிலும் நிர்வாணமாக அசுர வேகத்தில் ஓடித் தப்ப முயன்றார்.

நெரிசல் மிகுந்த சாலையில் ஒரு நபர் ஆடைகளின்றி ஓடி வருவதைக் கண்டு அங்கிருந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் இந்த வினோதக் காட்சியைப் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
