3 வயது சிறுமி விளையாடும்போது மார்பில் குத்திய கத்தரிக்கோல்... கதறித் துடித்த பெற்றோர்!

 
நெஞ்சில்

 

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில், விளையாடிக் கொண்டிருந்தபோது மார்பில் கத்தரிக்கோல் குத்தியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3 வயது சிறுமியை அகமதாபாத் மருத்துவர்கள் வெற்றிகரமாகக் காப்பாற்றியுள்ளனர்.

Doctors remove scissors embedded in 3-year-old toddler's chest in Gujarat, girl survives

கடந்த அக்டோபர் 29-ம் தேதி காலை, சிறுமி தனது 5 வயது அண்ணனுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கத்தரிக்கோல் சிறுமியின் மார்பில் குத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பரிசோதனையில் கத்தரிக்கோல் மார்பின் உள்ளே ஆபத்தான நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு சிறுமி மாற்றப்பட்டார். அங்கு டாக்டர் ராகேஷ் ஜோஷி தலைமையிலான குழந்தைகள் அறுவை சிகிச்சைக் குழுவினர் அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

இதில் கத்தரிக்கோல் பத்திரமாக அகற்றப்பட்டது. முக்கிய உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.குழந்தைகள் விளையாடும் இடங்களில் கத்தி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களை வைக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.