ஆளுநர் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக தலைவர்கள் பங்கேற்பு!

இன்று ஜனவரி 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குடியரசுதினத்தை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் குடியரசு நாள் தேநீர் விருந்து நடைபெற்று வருகிறது.
இந்த விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் ஆளுநர் ஆர்.என். ரவி குடியரசு நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை தமிழக அரசு புறக்கணித்தது.
இந்நிலையில் ஆளுநர் அளிக்கும் குடியரசு நாள் தேநீர் விருந்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி. பாலகங்காவும், பாஜக சார்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எச். ராஜா, நடிகர் சரத் குமார், தேமுதிக சார்பாக எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி, இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள், தவெக புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!