CM விஜய்யை எதிர்த்து திருச்சி கிழக்கில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தவெகவில் இணைந்தார்!

 
ராஜசேகரன்

திருச்சி மாவட்ட அதிமுக முன்னாள் பொருளாளர் ஜி. ராஜசேகரன், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அக்கட்சியில் இணைந்துள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களம் கண்டவர் ஜி. ராஜசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக விளங்கிய அவர், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அக்கட்சியிலிருந்து விலகியிருந்தார். தற்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது திருச்சி மாவட்ட அரசியலிலும், தவெக வட்டாரத்திலும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.