சென்னையில் எடப்பாடி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

 
எடப்பாடி

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் எவ்வித விலக்குமின்றி தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகத் தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.