தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை - நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
நாளை பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான 'எம்.ஜி.ஆர். மாளிகை'யில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முதற்கட்டப் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்படும்.

தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் ஆகியவற்றை முன்வைத்து மக்கள் மத்தியில் முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படும். மதுரை பொதுக்கூட்டத்தில் "210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்" என எடப்பாடி பழனிசாமி சூளுரைத்த நிலையில், அதனைச் செயல்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுக்க இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
